ஆசிாியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற மூன்றுஆண்டு அவகாசம்
ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று உச்ச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட அவகாசத்தை நீட்டித்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் டெத் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களின் வேலையை தக்கவைத்துக் கொள்ள மூன்று ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இருந்த கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டதால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு அல்லது படிநீக்கம் செய்யப்படலாம் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது 2026 ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் விரைவாக தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன தற்போதைய அறிவிப்பின்படி சிறப்பு டெட் தாள் -1 மற்றும் தாள் -2 தேர்வுகள் ஜூலை 4,5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சொறிவி பள்ளிகளில் செப்டம்பர் 1 2005 க்கு முன் பணியில் சேர்ந்த இதுவரை டெட் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள். ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெற மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக இணைய வழி மற்றும் நேரடி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன இந்த தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அந்த டெட் (TET) சான்றிதழ் ஆயில் முழுவதற்கும் செல்லுபடியாகும்.
Tags :


















