திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.தளக்குடி ஊராட்சியை சேர்ந்த மகாலட்சுமி தம்பதியினர் 2 வயது மகன் கடந்த சனிக்கிழமை காலை நூடுல்ஸ் சாப்பிட்ட பின்னர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக உடற்கூறு சோதனையில் சிறுவனின் விலா எலும்பு உடைந்து இருப்பதாகவும் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Tags :