சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதலைமைக்காவலர் பணி நீக்கம்.

by Admin / 29-05-2026 06:38:27pm
சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதலைமைக்காவலர் பணி நீக்கம்.

 கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் சென்னை கோடம்பாக்கத்தில் தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துள்ள நிலையில், அவரை வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் சிறுவனின் வாயில் மதுவை கட்டாயப்படுத்தி ஊற்றி  பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுவன்இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட எண்ணி, காவலரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினா் தலைமை காவலர் வேலப்பன் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவர், சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றுபவரே இந்த குற்றத்தை செய்ததனால் அவர் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டடாா்..இந்நிலையில், காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாக நடந்து கொண்ட தலைமை காவலரை இன்று சென்னை பெரு நகர  காவல் ஆணையாளர் அமல் ராஜ் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo