த்விஷா ஷர்மா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கை சி.பி.ஐ கைது செய்துள்ளது
த்விஷா ஷர்மா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கின் முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, சி.பி.ஐ அவரைக் கைது செய்துள்ளது
நொய்டாவைச் சேர்ந்த முன்னாள் 'மிஸ் புனே' நடிகையான த்விஷா ஷர்மா (33).: மே 12, 2026 அன்று போபாலில் உள்ள தனது திருமண வீட்டில் த்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் .திருமணமான 5 மாதங்களேயான நிலையில், த்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் வரதட்சணை கேட்டு அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக த்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
போபால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கிரிபாலா சிங்கிற்கு மே- 15 அன்று வழங்கிய முன்ஜாமீனை, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி ரத்து செய்தார். த்விஷாவின் உடலில் காயங்கள் இருந்ததற்கான சான்றுகள் மற்றும் அவர் இறப்பதற்கு முன் குடும்பத்தினருக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 80(2) (வரதட்சணைக் கொலை) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ கிரிபாலா சிங்கை உடனடியாகக் கைது செய்தது. இந்த வழக்கில் த்விஷாவின் கணவரான வழக்கறிஞர் சமர்த் சிங் ஏற்கனவே போபால் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், தற்பொழுது சிபிஐ அதிகாரப்பூர்வமாக எப்ஐஆா் பதிவு செய்து முழு விசாரணையை தன் வசம் எடுத்துள்ளது.
Tags :


















