லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது மீண்டும் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது மீண்டும் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைஇஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானின் தலையீட்டுடன் ஒரு தற்காலிக போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 17 அன்று அறிவிக்கப்பட்ட போதிலும், இருதரப்பும் அதை மீறியதாகக் கூறி தற்போதைய மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான சுவைஃபாத் மீது இஸ்ரேல் துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் குத்ஸ் படையுடன் தொடர்புடைய இமாம் உசேன் பிரிவின் ஏவுகணைத் தளபதி அலி அல்-ஹுசைனி என்பவரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டயர், சிடோன் மற்றும் நபடியே ஆகிய பகுதிகளில் 135-க்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்துள்ளது. இதில் 5 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்
.சஹ்ரானி ஆற்றிற்குதெற்கே உள்ள அனைத்துப் பகுதிகளையும் போர் மண்டலமாகஅறிவித்துள்ள இஸ்ரேல், அங்கிருக்கும் லெபனான் மக்களை உடனடியாக வடக்கு நோக்கி வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
லெபனான் எல்லைக்குள் நுழைந்துள்ள இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் வீரர்கள் மீது ஹெஸ்புல்லா அதிநவீன ஃபைபர் ஆப்டிக் ட்ரோன்கள்மற்றும் ராக்கெட்டுகள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
வடக்கு இஸ்ரேலில் ஹெஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். மார்ச் 2, 2026, முதல் லெபனானில் நடந்து வரும் மோதலில் இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சால் லெபனான் மக்கள் தொகையில் 20%-க்கும் அதிகமானோர், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர்.
Tags :



















