3 ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டும் - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

by Staff / 01-12-2023 03:03:35pm
3 ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டும் - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

பெங்களூருவில் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறுகையில், சீனாவின் வளர்ச்சி உடன் போட்டிப்போட உள்கட்டமைப்பு, கட்டுமான திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிக்க இன்ஃப்ரா துறை 3 ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் உயர்நிலையில் உள்ள நாடுகளில், மக்கள் 3 ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். நாமும் அதைச் செய்தால் சீனாவை விட இந்தியா வேகமாக வளர முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று கூறினார். இவர் ஏற்கனவே இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறியது சமூகவலைதளங்களில் விவாதப்பொருளானது.

 

Tags :

Share via

More stories

Logo