ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.5,000 அபராதம்

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் பட்டாசுகளை சொந்த ஊர்களுக்கு வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி எடுத்தச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags :