புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- தெற்கு வங்கக்கடல் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில்... தென் தமிழகத்தில் மழை தீவிரம்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் உருவாகி உள்ளதால் பிப்ரவரி 18 முதல் தமிழகத்தில் மீண்டும் மழை வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 17-ஆம் தேதியிலிருந்து தெற்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் இது உருவானது இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 18-ஆம் தேதி வாக்கில் தமிழக கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பிப்ரவரி 18 ,19 தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் திருவாரூர் ,நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Tags :



















