நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்தது-ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் திறமை வாய்ந்த வெளிநாட்டவர்களையும் சினிமா பிரபலங்களையும் குடிமக்களாக மாற்ற அந்நாட்டு அரசு கோல்டன் விசாவை தாராளமாக வழங்கி வருகிறது. 10 ஆண்டுகள் அந்த நாட்டின் குடிமக்களாக வாழ வழங்கப்படும் கோல்டன் விசாவை பெற பாலிவுட் நடிகர்கள், கேரள நடிகர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் மத்தியில் போட்டி எழுந்துள்ளது.
தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களை குறிவைத்து இந்த கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டன. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே இளம் நடிகையான தனக்கு கோல்டன் விசா கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என சில மாதங்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் கொண்டார்.ஐக்கிய அரபு அமீரகம் நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்துள்ளது.
Tags :