நாடுமுழுவதும் காந்தி சிலைமுன்பு காங்கிரஸார் போராட்டம் அறிவிப்பு.

by Editor / 26-03-2023 09:07:51am
நாடுமுழுவதும் காந்தி சிலைமுன்பு காங்கிரஸார் போராட்டம் அறிவிப்பு.

குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம்  அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் சத்தியாக்கிரக தீட்சை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ‘சங்கல்ப சத்தியாக்கிரகம்’ நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அனைத்து மாநில மற்றும் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.ஏற்கனவே காங்கிரஸார் தொடர் போராட்டங்களை நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில் இன்றைய போராட்டம்  காங்கிரஸார் மத்தியில் கூடுதல் வேகத்தை உருவாக்கிருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo