சேலம் மத்திய சிறை வார்டன் பணி இடை நீக்கம்
சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வந்த சிறை வார்டன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.சேலம் அஸ்தம்பட்டி அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த மணிவேலன் (வயது 28) என்பவர் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 22 ஆம் தேதி விடுமுறை எடுத்துக்கொண்டு மொரப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.அங்கு ஏற்பட்ட வாய் தகராறில் மணிவேலனும் கலந்துகொண்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் மொரப்பூர் காவல் நிலைய போலீசார் , சேலம் மத்திய சிறை வார்டன் மணிவேலன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் .பின்னர் மணி வேலன் கைது செய்யப்பட்டார்.
இது பற்றிய தகவல் சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத்திற்கு தெரியவந்தது.
இதன் பேரில் தற்போது சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் சிறை வார்டன் மணி வேலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறை வார்டன் மணிவேலன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதால் அவர் மீது உடனே நடவடிக்கை எடுத்து
மணி வேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Tags :