நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 01-12-2022 02:31:58pm
நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், தனியார் மடத்தில் நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் விருதுநகர் புல்லலகோட்டை ரோடு, எஸ். எஸ். எஸ். மாணிக்கம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் விருதுநகரில் நகைக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

திருச்செந்தூரில் தங்கினார் கடந்த 26-ந் தேதி சுப்பிரமணியன், தனக்கு மனது சரியில்லை நான் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறேன், என தனது மனைவியிடம் கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். காரை டிரைவர் சுரேஷ் ஓட்டினார். பின்னர் 28-ந் தேதி சுப்பிரமணியன் தனது மகனிடம், மதுரையில் ஒரு கூட்டத்தில் இருப்பதாக போனில் தெரிவித்துள்ளார். அன்று இரவு திருச்செந்தூர் வந்துள்ளார்.

பின்னர் சன்னதி தெருவில் உள்ள தனியார் மடத்தில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று முன்தினம் மதியம் ஊருக்கு புறப்பட வேண்டும், காரை தயாராக நிறுத்தும்படி தனது கார் டிரைவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து டிரைவர் சுரேஷ், மடத்தின் முன்பு காரை நிறுத்தி விட்டு காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் சுப்பிரமணியன் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர் சுரேஷ், சுப்பிரமணியன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அங்கு சுப்பிரமணியன் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். காரணம் என்ன? இதுபற்றி தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மோகன்காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக சுப்பிரமணியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மடத்தில் நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via