குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க காலை முதல் அனுமதி .

by Admin / 18-12-2025 05:42:32pm
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க  காலை முதல் அனுமதி .

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்வது குறைந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி உள்பட மற்ற அருவிகளிலும் சுற்றுலா பயணிகள்- ஐயப்ப பக்தர்கள் குளிக்க  காலை முதல் அனுமதி அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். தண்ணீர் வரத்து சீரானாலும் பாதுகாப்பு கருதி பிரதான அறிவியல் ஒரு பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கனமழை பெய்ததின் காரணமாக அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான அறிவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via
Logo