பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாசகுறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு -காவல் உதவி ஆய்வாளர் பணியிட நீக்கம்

by Admin / 24-05-2026 06:37:30pm
 பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாசகுறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு -காவல் உதவி ஆய்வாளர் பணியிட நீக்கம்

குடும்ப பிரச்சனை தொடர்பாக பழனியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பழனி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார். விசாரணைக்காக அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் பெண்ணின் குடும்ப பிரச்சனை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாசகுறுஞ்  செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பி தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி ஐ ஜி ஆகியோருக்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெண் மேற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது ஆதாரங்களோடு உறுதியானது அடுத்து அநாகரிகமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளரை பணியிடம் நீக்கம் செய்து திண்டுக்கல் செலக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo