தெலுங்கானாவில் கடுமையான வெயில் அலையின் காரணமாக ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர்.

by Admin / 24-05-2026 06:25:30pm
தெலுங்கானாவில் கடுமையான வெயில் அலையின் காரணமாக ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவில் கடுமையான வெயில் அலையின் காரணமாக ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெயிலின் தீவிரம் அதிகமாக இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மாநில முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதனால் வெப்ப அலைகிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் கடுமையான பொழுதின் பொழுது வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவ்வாறு செல்லும் பொழுது தாகம் எடுக்கவிட்டாலும் சீரான இடைவெளியில் போதிய அளவு தண்ணீர் மோர் இளநீர் அல்லது எலுமிச்சை சாறு பருக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதோடு வெளியில் செல்லும்போது இலகுவான தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.. குடை தொப்பி வெயில் கண்ணாடி மற்றும் கால்நடைகளை கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளதோடு வெப்ப பக்கவாதம் போன்ற அறிகுறிகள் அதாவது அதிகப்படியான மயக்கம் தலைவலி வாந்தி அல்லது மயக்க நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று அணுக வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo