அமெரிக்க வெள்ளை மாளிகைபாதுகாப்பு சாவடி அருகே நசீர் பெஸ்ட் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.

by Admin / 24-05-2026 06:12:46pm
அமெரிக்க வெள்ளை மாளிகைபாதுகாப்பு சாவடி அருகே நசீர் பெஸ்ட் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்க வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை வளாக 17ஆவது பாதுகாப்பு சாவடி அருகே மேரிலாந்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான நசீர் பெஸ்ட் என்பவர் அமெரிக்க ரகசிய படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இது துப்பாக்கி சண்டையின்போது பொதுமக்களில் ஒருவர் அடைந்ததாகவும் பாதுகாவலர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம் வெள்ளை மாளிகை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுட்டுக் கொல்லப்பட்ட நசீர் பெஸ்ட் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும் தான்தான் இயேசு கிறிஸ்து என்றும் ஒசாமா பின்லேடன் என்றும் அவர் முன்னுக்கு பின் முரணாக தன்னைப் பற்றி கூறி வந்ததாகவும் இவர் ஏற்கனவே 2025 இல் ஜூன் ஜூலை மாதங்களில் சட்டவிரோதமாக வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாகவும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதி மன்றம் எச்சரிக்கை செய்து இனி வெள்ளை மாளிகை பகுதிக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து விடுவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு பின்னணி குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

அமெரிக்க வெள்ளை மாளிகைபாதுகாப்பு சாவடி அருகே நசீர் பெஸ்ட் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
 

Tags :

Share via

More stories

Logo