மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பேசிய கருத்திருக்கு தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து பெரும் எதிர்ப்பு
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் பேசிய கருத்திருக்கு தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து பெரும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. திமுக கண்டனம் தெரிவித்துள்ளதோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியின் கோரிக்கை மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் கர்நாடக அரசியல் இந்த முடிவை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க கூடாது என்றும் உடனடியாக தனது திடமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு ,டி கே சிவகுமாரின் பேச்சு அவரது ஆணவப் போக்கை காட்டுகிறது என்றும் காவிரியின் கீழ் படுகை மாநிலமான தமிழகத்தின் அனுமதி இன்றி கர்நாடக எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு மூளில் உரிமையும் கடமையும் உள்ளது என்றும் கர்நாடகா தாக்கல் செய்ய உள்ள புதிய திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இவர்களோடு அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Tags :














.jpg)



