மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமையில்லை- கா்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமாா்

by Admin / 24-05-2026 05:18:59pm
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமையில்லை-  கா்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமாா்

கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு இவ்வித உரிமையும் இல்லை என்றும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மத்திய நீர் ஆணையமே எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு மிக விரைவில் தாக்கல் செய்யும் என்றும் தெரிவித்துள்ளதோடு மத்திய நீர் அனைத்தையும் விரும்பும் ஒப்புதல் பெற்றவுடன் அணை கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை உடனடியாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 187 டிஎம்சி காவேரி தண்ணீரை கர்நாடகா அரசு தொறந்து முறைப்படியாக விடும் என்றும் அணை விவகாரத்தில் மத்திய நீர் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்புவதற்கு சட்டபூர்வமான எந்த விதமான அடிப்படை இல்லை என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo