162 இடத்தில் மின்மோட்டார்கள் வைத்து மழை நீர்கள் அகற்றும் பணி- சென்னை மாநராட்சி ஆணையாளர் சுகன் தீப் சிங் பேடி
சென்னை மாநராட்சி ஆணையாளர் சுகன் தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறும்போது:
மழை தண்ணீர் வெளியேற்றும்பணிகளில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன 162 இடத்தில் மின்மோட்டார்கள் வைத்து மழை நீர்கள் அகற்றும் பணிகள் நடந்துவருவதாகவும்
162 இடங்களில் மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் மின் மோட்டார்கள் தேவை எனில் அந்த பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அவர்களும் அதற்கு நீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நீர் அகற்றும் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார், மேலும் 30 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு வார் ரூம்தாயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது வரை 3000 பணியாளர்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 169 தங்குமிடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags :



















