5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள்  9 பேர்  ராஜினாமா.

by Editor / 08-12-2023 08:35:02am
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள்  9 பேர்  ராஜினாமா.

சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட  மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் படேல் உள்பட பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்களது மக்களவை உறுப்பினர் பதவியை நேற்று முன்தினம் (டிச.6) ராஜினாமா செய்தனர். அவர்களுடன் சேர்த்து மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்க உள்ளனர். மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.பி.க்கள் விபரம் வருமாறு : மத்திய வேளாண் துறை  அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்யா பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக்,  ராஜஸ்தானைச் சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,  சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய் மற்றும் அருண் சாவ்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் படேல் ஆகிய இருவரும், மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள்  9 பேர்  ராஜினாமா.

Share via