குற்றால அருவிகளில் இன்றுமுதல் 2ஆம் தேதிவரை குளிக்க தடை 

by Editor / 31-12-2021 01:14:49pm
குற்றால அருவிகளில் இன்றுமுதல் 2ஆம் தேதிவரை குளிக்க தடை 

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  கடந்த 20 ஆம் தேதி  முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஐந்தருவி புலியருவி குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள் மேக்கரை பகுதிகள்  உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்  மட்டுமே சமூக இடைவெளியுடன்  குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஐயப்ப பக்தர்கள் திடீரென விதிமுறைகளை மீறி குவியலாக கும்பலாக நூற்றுக்கணக்கானோர் அருவியை நோக்கி விரைந்து சென்று குளியலை தொடர்ந்து வந்தனர்.இந்த நிலையில் கோரோனோ தொற்று அச்சம்,மற்றும்  ஒமிக்ரான் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் 31ஆம் தேதியான இன்று முதல் 2ஆம் தேதிவரை 3நாட்களுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

குற்றால அருவிகளில் இன்றுமுதல் 2ஆம் தேதிவரை குளிக்க தடை 
 

Tags :

Share via