புதிய பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயிலின் காலிப்பெட்டி தொடரின் முதல் பயணம்
கன்னியாகுமரி - ராமேஸ்வரம், திருப்பதி - இராமேஸ்வரம் ஆகிய ரயில்களின் பராமரிப்பு பணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை கன்னியாகுமரி - இராமேஸ்வரம் ரயிலின் காலிப்பெட்டி தொடர் புதிய பாம்பன் பாலத்தில் தன் முதல் பயணத்தை முத்திரை பதித்துள்ளது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 25 நிமிடங்களில் காலை 06.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.
Tags : புதிய பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயிலின் காலிப்பெட்டி தொடரின் முதல் பயணம்