அதிமுக சார்பாக சட்டமன்ற இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு வினியோகம் என்று தொடங்கியது. .

by Admin / 08-09-2026 11:48:19pm
அதிமுக சார்பாக சட்டமன்ற இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு  போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு வினியோகம் என்று தொடங்கியது. .

அதிமுக சார்பாக சட்டமன்ற இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு வினியோகம் என்று தொடங்கியது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அறிக்கையில் இரு தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் விருப்பமுள்ளவர்கள்  விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது.. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதியும் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் செப்டம்பர் 19 ஆம் தேதிஎன்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த இரு தொகுதிகளும் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் பொருட்டு தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களோடு மேலும் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜநாமா செய்திருந்தார். அத்துடன் அதிமுகவைச் சேர்ந்த நான்கு பேர் ராஜினாமா செய்திருந்தனர். வழக்குகளின் காரணமாக அந்த தொகுதிகளுக்கு தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டதன் காரணமாக இரண்டு தொகுதிகளில் மட்டும் தற்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo