மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு தங்க நகை கடன் வழங்குவதில் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது

அண்மையில் ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதில் பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது. இது இந்தியாவெங்கும் பெரும் பிரச்சனையாக வெடித்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு தங்க நகை கடன் வழங்குவதில் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது அதன்படி இரண்டு லட்சத்திற்கு குறைவாக தங்க நகை கடன் பெறுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதோடு வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்த விதிகளை தள்ளி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது
மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து தம் எக்ஸ் வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ளது.
சிறிய கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை சரியான நேரத்தில் அதோடு விரைவாக வழங்குவதற்கு உறுதி செய்யும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
Tags :