வடகரையில் 1 கோடியே 14 லட்சம் மதிப்பில் புதிய  பேரூராட்சி அலுவலகம்  முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

by Editor / 30-05-2025 10:34:37am
வடகரையில் 1 கோடியே 14 லட்சம் மதிப்பில் புதிய  பேரூராட்சி அலுவலகம்  முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழக அரசின் சேவைகள் எளிதாக மக்களை சென்றடைய எளிமை, ஆளுமை எனும் புதிய திட்டத்தை நேற்று  காலை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் துவக்கி வைத்தார் . அப்போது பேரூராட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ. 77.07 கோடி  செலவில் 14 முடிவுற்றப் பணிகளை  திறந்து வைத்தார். இதில் தென்காசி மாவட்டம் வடகரையில் 1 கோடியே 14 லட்சத்தில் புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் மற்றும் 16 லட்சத்தில் நூலக கட்டிடத்தையும் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் . இதையடுத்து வடகரை புதிய  பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூது இனிப்புகள் வழங்கி குத்து விளக்கேற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை , செயல் அலுவலர் அமானுல்லா, துணை தலைவர் மாலதி ராஜேந்திரன், பேரூர் செயலாளர் தங்கப்பா (எ) முகமது உசேன், மாவட்ட துணை செயலாளர் கனிமொழி,தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, பொது குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய  செயலாளர் திவான் ஒலி , செங்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் வாசுதேவன், தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷெரிப் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் ஹக்கீம், அவைத் தலைவர் முகைதீன் பிச்சை ,துணைச் செயலாளர்கள் பாண்டி, நூர் முகமது ,ஆயிஷா பேகம், பொருளாளர் அருணாச்சலம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேக் உசேன் பீவி ,முத்து முகமது,ஆயிஷா பேகம் ,சையது அலி, மைதின் பாத்து ,ஆறுமுகசாமி, ரஹ்மத்துல்லா, சாகுல் ஹமீது, சமீமா பேகம் , அரபு நிஷா ,நாகூர் மீராள் , பாத்திமாள், மாவட்ட பிரதிநிதிகள் சாகுல் ஹமீது ,ராஜேந்திரன், பாப்பா, ஒன்றிய பிரதிநிதிகள் முகமது வவுதார், கனல் காஜா, முகமது இஸ்மாயில் ,மூர்த்தி,வார்டு செயலாளர்கள் முகமது கனி, சதாம் உசேன், அப்துல் ரஹீம், சையது அகமது, அப்துல் காதர், சையது முகம்மது, அருணாசல சாமி, முகமது அனிபா, சிவகாமி ,முருகையா, ஷேக் தாவுது, இம்ரான் கான் ,முகமது பாரூக், ரஹ்மத்துல்லா, திவான் மீராள் ,சமுத்திரவேல் ,திருமலையாண்டி ,பேச்சிமுத்து, அச்சன் புதூர்செயலாளர் வெள்ளத்துரை, அவைதலைவர் கட்டாரி பாண்டியன், மீனவர் அணி துணை அமைப்பாளர் முகமது இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : வடகரையில் புதிய  பேரூராட்சி அலுவலகம் .

Share via