தமிழக வெற்றிக்கழக தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.
தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் தாங்கள் இடம்பெறாத சூழலில் தாங்கள் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இல்லை என்றும் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்க போவதில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவருமான கே. பாலகிருஷ்ணன் , பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். தங்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவது தொடர்பும் என்றும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தமிழக வெற்றிக்கழக அரசுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் பொதுச் செயலாளர் சண்முகம் விளக்கம் கொடுத்துள்ளார்.
Tags :



















