மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறுவதிலே தங்களது பொன்னான காலத்தை வீணடித்து விட்டனர்.

by Admin / 09-09-2026 12:10:49am
 மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறுவதிலே தங்களது பொன்னான காலத்தை வீணடித்து விட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 28 நாட்கள் நடந்த முடிந்து நிறைவு பெற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம், சட்டப்பேரவையில் தான் எழுப்பிய முக்கிய கேள்விக்கு முதலமைச்சர் விஜய் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்றும் நாள் ஒன்றுக்கு சுமார் 10 மணி நேரம் வரை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகமும் எதிர்க்கட்சியான திமுகவும் மக்கள் மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறுவதிலே தங்களது பொன்னான காலத்தை வீணடித்து விட்டனர் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

 

 

Tags :

Share via
Logo