விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 04-09-2023 05:00:05pm
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

மெக்சிகோவில் வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றில் மலர்தூவுவதற்காக ஏற்பாட செய்யப்பட்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். தம்பதி ஒன்று தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவிக்கும் பார்ட்டி நிகழ்ச்சியின் போது விருந்தினர்கள் முன் விமானம் விபத்துக்குள்ளானது. 'ஓ பேபி' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகையின் முன் நின்று கொண்டிருந்த தம்பதிகளுக்கு மேல் விமானம் பறந்தது. ஆனால் இந்த நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via