8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

by Staff / 29-09-2025 09:13:30am
 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செப்.29) காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

Tags : 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

Share via