கரூர் கூட்ட நெரிசல்.. பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

கரூரில் நேற்று முன்தினம் (செப்.27) தமிழக வெற்றிக்க ழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அன்றைய தினம் 8 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று (செப்.28) 40-ஆக உயர்ந்த நிலையில் இன்று (செப்.29) 41 ஆக உயர்ந்துள்ளது. நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags : கரூர் கூட்ட நெரிசல்.. பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.