ஏழைப் பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த நடிகர்கள்.ராகவா லாரன்ஸ் பாலா,
ராகவா லாரன்ஸ் மற்றும் சின்னத்திரை நடிகர் பாலா ஆகிய இருவரும் இணைந்து ஏழைப் பெண் ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவி செய்திருக்கின்றனர். கணவனை இழந்து, ரயிலில் சமோசா விற்று, தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்த்து வரும் முருகம்மாள் என்பவருக்கு அவரின் விருப்பத்திற்கு ஏற்ப புது ஆட்டோ ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த பாலா, “எனது ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் உதவியுடன் இந்த நல்ல செயலை செய்து முடித்தோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
Tags :