அதிமுக-தேமுதிக கூட்டணி சாதி, மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டது

by Staff / 30-03-2024 01:12:12pm
அதிமுக-தேமுதிக கூட்டணி சாதி, மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டது

அதிமுக-தேமுதிக கூட்டணி சாதி, மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து ஈரோடு-சத்தி சாலை கனிராவுத்தர்குளம் பகுதியில் நேற்றிரவு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்றாலே மரியாதை, அன்பு, பாசம் மிக்கவர்கள். ஈரோட்டில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றியடையச் செய்தால் சுகாதாரமான குடிநீர், வழங்கவும் நிலத்தடி நீர் மாசை நீக்கவும் நடவடிக்கை எடுப்பார். எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றார்.

 

Tags :

Share via

More stories