பணம், பொருளை கொடுத்து பெறுவது வெற்றி அல்ல - அன்புமணி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “பணம், பொருளை கொடுத்து பெறுவது வெற்றி அல்ல. ரூ.6,000 பணமும், ரூ.4,000-திற்கு பொருளும் திமுக கொடுத்திருக்கிறது. 3 தவணையாக வாக்காளர்களுக்கு திமுக பணத்தை கொடுத்துள்ளது. இத்தனை பொருட்கள் கொடுத்தது, பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா?” என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
Tags :