மாமாவை தீர்த்துக்கட்டிய இளைஞர்

கர்நாடகா: சிக்கமகளூருவை சேர்ந்த தம்பதி சுப்பிரமணியா (62) - மீனாட்சி (55). இதனிடையே சுப்பிரமணியாவின் தங்கை மகன் பிரதீப் ஆச்சாரி (32) என்பவருடன் மீனாட்சிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுப்பிரமணியாவுக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, இருவரும் திட்டம் தீட்டி கூலிப்படையை வைத்து சுப்பிரமணியாவை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நாடகமாடியுள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது.
Tags :