புயலால் 3 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தென்மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர், அவசர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பல இடங்களில் தெருக்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் மரங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
Tags :