25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் !

by Editor / 14-09-2021 02:49:02pm
25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் !

மலையாள மொழிப் படங்கள் அதிகமாகக் கொண்டாடப்படும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறார் பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் சாமி.1992-ல் 'டாடி' என்கிற படத்தில் அறிமுகமாகி பின் 1996 ஆம் ஆண்டு 'தேவராகம்' படத்துடன் மலையாளத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அரவிந்த சாமி தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்

'ஒட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டி.பி.பெல்லினி இயக்க நடிகர் ஆர்யா தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சமீப காலமாக அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via