முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை கொண்டாடி வரவேற்ற வைகோ!

by Newsdesk / 29-08-2021 05:43:48pm
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை கொண்டாடி வரவேற்ற வைகோ!



இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்ப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் சென்னை எழும்பூர் உள்ள தாயகத்தில் நடைபெற்றது.

 இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொது செயலாளர் வைகோ, 2019 இல் தேர்வு செய்யப்பட்டு விடுபட்ட 5336 கேங்மேன் பணியாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணி வழங்க வேண்டும், சொந்த மாவட்டங்களில் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
 
இது வெற்றி பெற பாடுபடுவோம் என தெரிவித்த அவர், இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என முதலமைச்சர் அறிவித்து இருப்பதை வரவேற்ப்பதாக கூறினார்.

ஐ.சி.எப் தனியார் மயம் ஆக்கப்படுவதை தடுக்க இரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது ஒரு போதும் இரயில்வே தனியார் மயமாகாது என இரயில்வே அமைச்சர் தெரிவித்ததாக தெரிவித்த வைகோ

. அதிக லாபம் ஈட்டும் பொது துறையாக இரயில்வே உள்ளதாகவும்,  இரயில்வேவை ஒருபோதும் அரசு தனியார் மயமாக்கது என நம்பிக்கையோடு இருப்பதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு விரோதமாக மிருகதனமாக ஹரியானாவில் அடித்து உள்ளார்கள். விவசாயிகளுக்கு விரோதமான அரசு மோடி அரசு என குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via