முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்-அர்ஜுன் சம்பத்.

அஜித் குமார் கொலை வழக்கில் புகார் கொடுத்த நிகிதாவை யார் பாதுகாக்கிறார்கள் "யார் அந்த சார் என இரண்டாவது ஒரு முறையாக கேட்கிறோம்"கமல்ஹாசன் திமுகவில் இணைந்தது போல் நடிகர் விஜய்யும் இணைவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.
தேனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 32 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்
முன்னதாக தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில் முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது,
முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற அதே இடத்தில் தற்போது ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முஸ்லிம் மாநாடு நடத்துகிறார்கள், உள்நோக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும்
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட போது அனைவரும் குரல் கொடுத்தனர் ஆனால் அஜித்குமார் ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட போது ஒருவரும் குரல் கொடுக்கவில்லை
தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு சீர்கேட்டுள்ளது அதை பாதுகாக்க தவறிய "சாரிமா ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்"
"ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்று மக்களை பாதுகாப்பதாக கூறுகிறார் ஸ்டாலின் ஆனால் திமுகவிடம் இருந்து தான் மக்களை பாதுகாக்கவேண்டும திமுகவால் மண்ணுக்கும், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய அரசு கொண்டு வந்த ஜல் ஜீவன் திட்டம், வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் திமுகவினர் ஊழல் செய்கின்றனர்.
ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டை விட அதிகமான சிலைகளை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார் அது கண்டிக்கத்தக்கது அவர் கூறிய கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாப்பது யார் "யார் அந்த சார் என்று இரண்டாவது முறை கேட்கிறோம்"கிறிஸ்துவ மிஷனரிகளால் கொண்டுவரப்பட்ட கட்சிதான் விஜயின் த.வெ.க பாஜகவை பற்றி பேசுவதற்கு விஜய்க்கு எந்த அருகதையும் கிடையாது.
திமுகவின் A டீம் தான் விஜய் கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்தை தயார்படுத்தியது திமுக தற்போது த.வெ.கவை தயார்படுத்தி வருகிறது விஜய் 2-3 சதவீத வாக்குகள் பெறுவார் பின் கமல் ஒரு சீட்டுக்காக இணைந்தது போல் விஜயும் இணைவார் என்று தெரிவித்தார்
Tags : அர்ஜுன் சம்பத்