நெடுஞ்சாலையில் யானை கூட்டம் சாலையின் நடுவே நடந்து சென்றதால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் .
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவை தேடி குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் நடமாடி வருகிறது இந்த நிலையில் உதகையில் இருந்து மஞ்சூர் வழியாககோவை செல்லும் சாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி பெரிய கரடி ஒன்று வாக்கிங் சென்றது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கரடியை தங்கள் செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது மேலும் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் யானை கூட்டம் சாலையின் நடுவே நடந்து சென்றதால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து வருகின்றனர் இந்தசாலை குறுகிய சாலை என்பதால் தங்கள் வாகனத்தின் ஒலி எழுப்பியும் யானைகள் சாலையை விட்டு வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையின் நடுபகுதியில் நடந்து சென்றது இரண்டு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் சாலை ஓர வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை இயக்கி கோவையை நோக்கி சென்றனர்.
யானைகள் இந்த சாலையில் வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது சாலையில் யானைகள் பல மணிநேரம் சாலையில் நிற்பதால் தற்போது டீசல் பெட்ரோல் விற்கும் விலையில் வாகனத்தை பலமணிநேரம் ஆப் செய்யாமல் தொடர்ந்து இயக்குவதால் பெட்ரோல்,டீசல்
விரயம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த சாலையில் வனத்துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வது தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Tags : நெடுஞ்சாலையில் யானை கூட்டம் சாலையின் நடுவே நடந்து சென்றதால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் .