திருவனந்தபுரம் சிறையில் இருந்து தப்பிய கொலைக் குற்றவாளி உடுப்பியில் கைது
திருவனந்தபுரம் சிறையில் இருந்து தப்பியோடிய கொலைக் குற்றவாளி உடுப்பி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் இருந்து தப்பியோடிய ராஜேஷ் (39) கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் பூஜாப்புரா மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர், 23 டிசம்பர் 2020 அன்று வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து தப்பினார். ராஜேஷை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் தலைமறைவாக இருந்தார்.
அவர் உடுப்பி மாவட்டத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் ராஜேஷை பிரம்மவார் தாலுக்காவின் நைலாடி பில்லாடி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கப்பினாஹிட்லுவில் இருந்து காவலில் எடுத்து குந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருவனந்தபுரம் ரூரல் போலீஸார் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, ராஜேஷை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags :