மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிப்பு.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் கோவையில், அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தநிலையில் இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.இந்த அறிக்கையை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்பித்தார்.
Tags :