குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி.

by Editor / 24-05-2024 10:03:40am
குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி.

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் இன்று (மே 24) மாலை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பழைய குற்றால அருவியில் இன்று காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படுகிறது. மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாட்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

Tags : குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி

Share via