நெடுஞ்சாலையில் திடீரென பற்றிய லாரி

by Staff / 25-01-2023 03:07:19pm
நெடுஞ்சாலையில் திடீரென பற்றிய லாரி

கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள வாங்க பாளையம் மேம்பாலத்தில் காக்காவாடி பகுதியில் இருந்து மரப்பட்டை கழிவுகளை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் ஞானவேல் வாகனத்தை மேம்பாலம் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி விட்டார் ஆனால் வாகனம் முன்பகுதி முழுவதும் எரிந்தது.தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

 

Tags :

Share via
Logo