பத்திரிக்கையாளர் சித்திக்கை கொன்றது யார்..? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க நாளிதழ்..

by Admin / 30-07-2021 02:10:22pm
பத்திரிக்கையாளர் சித்திக்கை கொன்றது யார்..? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க நாளிதழ்..

.

பிரபல பத்திரிக்கையாளர் டானிஷ் சித்திக்கை, தலிபான்கள் திட்டமிட்டே கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞரான டானிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுடனான போரினை படம் பிடிக்க சென்ற போது உயிரிழந்ததாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் ஆப்கான் படையுடன் நடந்த மோதலின் போது, படுகாயம் அடைந்த டானிஷுக்கு அருகில் உள்ள மசூதியில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அடையாளம் அறிந்தே தலிபான்கள் மசூதியை சூழ்ந்துதாக்குதல் நடத்தி அவரை படுகொலை செய்ததாகவும் அமெரிக்க நாளிதழ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via