எம்.பி., எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

by Editor / 28-07-2021 06:41:21pm
எம்.பி., எம்.எல்.ஏக்கள்  கிரிமினல் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

015ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் 6 பேர் நாற்காலிகளை உடைத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 6 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி வழக்குதொடரப்பட்டது. அதை கீழமை நீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றமும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எம்.பிக்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் அந்த பதவி வழங்கும் அதிகாரம் தடையின்றி பணி செய்வதற்காக மட்டுமே என்றும், அதை பயன்படுத்தி கிரிமினல் குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தினால், சாமானியர்கள் சந்திக்கும் அனைத்தும் சட்ட நடைமுறைகளையும் மக்கள் பிரதிநிதிகளும் சந்திக்க வேண்டும் என கூறி கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Tags :

Share via