வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை

by Admin / 26-01-2026 04:13:35pm
வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை

வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ,தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ,கோயம்புத்தூர் ஈரோடு திண்டுக்கல் ,மதுரை ,விருதுநகர் ,தென்காசி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது .புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோரப் பகுதிகள் ,மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via