டெல்லியில் விவசாயிகள் பேரணி.. தடுப்புகள் அமைத்த போலீஸ்
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை செவ்வாய்க்கிழமை ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மாபெரும் பேரணி நடத்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதனால், ஹரியானா மற்றும் டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, மேற்குவங்கம், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 20,000 விவசாயிகள் டெல்லி வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.
Tags :