10 இடங்களில் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 05-04-2023 01:28:22pm
 10 இடங்களில் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

குமரியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று (புதன்கிழமை) மாலை மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாகர்கோவில் வேப்பமூடு, ராஜாக்கமங்கலம், துவரங்காடு, மயிலாடி, திங்கள் சந்தை, தக்கலை ஆர். டி. ஓ. அலுவலகம், புதுக்கடை, குலசேகரம் சந்தை, மேல்புறம், மார்த்தாண்டம் ஆகிய 10 இடங்களில் போராட்டம் நடக்கிறது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via