காதல் விவகாரம் சமாதானம் செய்ய முயன்ற 2பேரை கொலை செய்த 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

by Staff / 27-08-2025 10:42:26am
காதல் விவகாரம் சமாதானம் செய்ய முயன்ற 2பேரை கொலை செய்த 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருவாரூர் மாவட்டம் பண்டுகுடி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது ஆதாம் (வயது 23) என்பவரும் திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், முகமது ஆதமுடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முகமது ஆதம், தற்போது தென்காசியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் தேதி நள்ளிரவு முகமது ஆதம், அவரது நண்பர்களான பாண்டுகுடியை சேர்ந்த முகமது ரசூல்தீன் மற்றும் தென்காசியை சேர்ந்த ஹாஜ் முகம்மது ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புலிவலம் காந்தி நகரில் உள்ள அந்த பெண் வீட்டிற்கு வந்து தன்னிடம் பேசாதது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பெண்ணின் அண்ணன் கோபிகிருஷ்ணன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.இதில் சண்டையை சமாதானம் செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியரான சந்தோஷ்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகிய இவரை கத்தியால் முகமது ஆதம் குத்திவிட்டு தப்பி ஒடினார். இதில் சம்பவ இடத்திலே சந்தோஷகுமார் உயிரிழந்தார். மேலும் சிகிச்சை பலனின்றி தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆதம், முகமது ரசூல்தீன், ஹாஜ் முகம்மது ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் கொலை மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்விற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி முகமது ஆதாம்  ஹாஜி முகமது முகமது ரசூதின் ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் சட்டவிரோத மது விற்பனை கடத்துதல் பதுக்கி வைத்தல் கஞ்சா குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரூன்கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : காதல் விவகாரம் சமாதானம் செய்ய முயன்ற 2பேரை கொலை செய்த 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

Share via