துண்டாக கிடந்த திருப்பூர் இளைஞர் கை;

by Editor / 09-08-2025 02:00:37pm
துண்டாக கிடந்த திருப்பூர் இளைஞர் கை;

கோவை தனியார் நிறுவனத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மனித கை தொடர்பான விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கள்ளபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், அது திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டியனின் வலதுகை என்பது தெரியவந்தது. ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற அழகுபாண்டியனின் கை, கால் பகுதிகள் சிதைந்துள்ளது. இதையடுத்து சிதைந்த பாகங்களை எரிப்பதற்காக கொண்டு சென்ற நிலையில், நாய் ஒன்று துண்டான அவரது கையை தனியார் நிறுவனத்தில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

 

Tags :

Share via